சைபர் கிரைம் (Cyber Crime)
சைபர் குற்றம் என்பது டிஜிட்டல் சாதனங்கள் மற்றும்/அல்லது வலையமைப்புகளைப் (Internet) பயன்படுத்தி செய்யப்படும் பரந்த அளவிலான குற்றச் செயல்களை உள்ளடக்கியது ஆகும். சைபர் குற்றவாளிகள் கணினி அமைப்புகள் மற்றும் வலையமைப்புகளைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்படாத தரவுகளை பெறவும், முக்கியமான தகவல்களைத் திருடவும், சேவைகளை சீர்குலைக்கவும், தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு நிதி அல்லது நற்பெயர் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தவும் கூடும்.
பதிவு செய்யப்பட மொத்த வழக்குகள்:
- 2020: 30,142
- 2021: 52,000+
- 2022: 10.29 lakh
- 2023: 15.96 lakh
- 2024: 22.68 lakh
- 2025: 25 lakh (ரூபாய் மதிப்பில் மொத்தம் 19,800 கோடி
அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்கள்:
- தெலுங்கானா - 15.03 %
- குஜராத் - 14.58 %
- தமிழ்நாடு - 11.97 %
- பெங்களூரு -11.93 %
- ஜெய்ப்பூர் -11.72 %
சைபர் கிரைமில் நீங்கள் எவ்வாறு பாதிக்கப்படுவீர்கள்?
- உங்களுக்கு திடீரென்று வங்கியில் இருந்து உங்கள் அக்கவுண்ட் debit freeze (உங்கள் அக்கவுண்டை எந்த வகையிலும் பணம் எடுக்க முடியாதவாறு லாக் செய்தல்) செய்யப்பட்டுள்ளது என்று மெசேஜ் வரலாம் - Under section 14 C
- ஏதேனும் ஒரு தொகை (500 அல்லது 1000) என உங்கள் அக்கவுண்டில் Lien mark ( ஏடிஎம் கார்டு/ மொபைல் பேங்கிங்/ இன்டர்நெட் பேங்கிங் என்ன எந்த வகையிலும் எடுக்க முடியாதவாறு லாக் செய்தல்) செய்யப்பட்டிருக்கலாம். - Under any FIR number
எதனால் நீங்கள் பாதிக்கப்பட்டீர்கள் அதற்கான காரணம்
1. நீங்கள் ஆன்லைன் கேம் விளையாடி அதன் மூலம் பணம் சம்பாதிப்பவராக இருக்கலாம்
2. ஏதாவது ஒரு ஏமாற்று ஆன்லைன் APP மூலமாக பணம் செலுத்தி அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்
3. அல்லது கேம் அல்லது ஆன்லைன் APP மூலம் பணம் சம்பாதிக்கும் நபர் உங்களுக்கு பணம் அனுப்பி இருக்கலாம்.
எனது அக்கவுண்ட் எவ்வாறு சைபர் கிரைமில் இருந்து பாதுகாப்பது
1. தெரியாத நபர்களிடம் இருந்து மொபைல் நம்பர் / PHONE PAY/ GPAY/ PAY TM மூலமாக பணம் வாங்குவதை தவிர்க்கவும்.
2. பிசினஸ் தொடர்பான தொடர்பான வரவு செலவுகளை மொபைல் நம்பர் மூலமாக பெறுவதை தவிர்க்கவும். பிசினஸ் QR CODE பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டாக கேம் விளையாடும் நபர் A, அவர் சம்பாதித்த ஏமாற்று பணத்தை அவர் நண்பர் B க்கு பணம் அனுப்புகிறார். இது LAYER 1.
நபர் B அவர் நண்பர் C க்கு பணம் அனுப்புகிறார்.இது LAYER 2.
நபர் C அவர் நண்பர் D க்கு பணம் அனுப்புகிறார்.இது LAYER 3.
இவ்வாறு LAYER 9 வரை உள்ள அக்கவுண்டுகள் சைபர் செல் மூலம் சரி பார்க்கப்படுகின்றன. நீங்கள் LAYER 1 - 9 என எந்த லேயரில் இருந்தாலும் உங்கள் அக்கவுண்ட் DEBIT FREEZE/ LIEN MARK செய்யப்படலாம்.
எனவே மிகவும் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே மொபைல் எண் மூலமாக பணம் பெறுங்கள். மிகவும் விழிப்புணர்வோடு இருங்கள் உங்கள் அக்கவுண்ட் சைபர் செல் மூலமாக லாக் செய்வதை தவிர்த்திடுங்கள்.
உங்கள் அக்கவுண்ட் லாக் செய்யப்பட்டால் எவ்வாறு UN-BLOCK செய்வது என்பது பற்றி தனியாக ஒரு பதிவில் தெரிவிக்கிறேன்.